1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. seeman says about udhayanidhi

’வாரிசு’ பிரச்சனைக்கு உதயநிதி காரணமா? சீமான் பதில்

seeman
விஜய் நடித்த ’வாரிசு’ படத்தின் பிரச்சனைக்கு உதயநிதி காரணமா என்ற கேள்விக்கு சீமான் அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
பொங்கல் தினத்தில் தெலுங்கு நடிகர்களின் படங்கள் மட்டுமே ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டதை அடுத்து ’வாரிசு’  படத்தின் ரிலீஸ்க்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது 
 
இந்த நிலையில் இது குறித்து ஏற்கனவே சீமான் உள்பட பல பிரபலங்கள் தெலுங்கு திரை உலகினர்களை எச்சரித்தும் வேண்டுகோள் விடுத்தும் வரும் நிலையில் இந்த பிரச்சனைக்கு உதயநிதி ஸ்டாலின் காரணமா என்ற கேள்வியை சீமானிடம் கேட்கப்பட்டது 
 
அதற்கு அவர் பதிலளித்தபோது உதயநிதியை அந்த அளவுக்கு குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் அது போலெல்லாம் அவர் நடந்து கொள்ள மாட்டார் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்
 
மேலும் ’வாரிசு’ உரிய நேரத்தில் வரும் என்றும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என தெலுங்கு திரையுலகினர் எனக்கு உறுதி அளித்துள்ளார்கள் என்றும் ஒருவேளை வாரிசு திரைப்படம் வெளியாகவில்லை என்றால் நான் இறங்கி போராடுவேன் என்றும் அவர் கூறி உள்ளார்
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
64.31 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!