திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : ஞாயிறு, 20 நவம்பர் 2022 (11:38 IST)

மாரி செல்வராஜின் அடுத்த படம்.. ஹீரோ இவரா?

mari
இயக்குனர் மாரிசெல்வராஜ் தற்போது உதயநிதி நடித்து வரும் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் கலையரசன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் சற்று முன் மாரி செல்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை தனது அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து போஸ்டர் ஒன்றை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் பூஜை நாளை நடைபெற இருப்பதாகவும் இந்த படம் குறித்த விரிவான தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva