திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஜனவரி 2024 (10:16 IST)

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சிஎஸ்கே அணியில் 11 பேரும் தமிழர்கள்தான்: சீமான்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது ஒரு தமிழர் கூட இல்லை என்ற கவலை வேண்டாம், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன்  அந்த அணியில் உள்ள 11 பேரும் தமிழர்களாகத்தான் இருப்பார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழ்நாட்டு அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு தமிழர் கூட இல்லையா என்ற கேள்வி கேட்கப்பட்ட போது அதற்கு பதில் அளித்தவர்  ’நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் 11 பேரும் தமிழர்கள் தான் இருப்பார்கள் என்றும் நாமும் சேர்ந்து விளையாடுவோம் என்றும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தமிழர்கள் இல்லை என வருத்தப்பட வேண்டிய நிலை இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.  
 
மேலும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமரை ஏன் அழைக்க வேண்டும் என்றும் கேலோ என்பது இந்தியில் விளையாட்டு என்ற அர்த்தம் ஹிந்து தெரியாது போடா என்று கூறியவர்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்தியை வாடா என்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
 
மேலும்  முதல்வராக வேண்டும் என்பதற்காக கட்சி ஆரம்பித்து இருக்கிறேன் தவிர முச்சந்தியில் நிற்க அல்ல என்றும் அவர்களது கூறுவினார்.
 
Edited by Mahendran