செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2024 (13:14 IST)

விஜய் அவர் வேலையை பார்க்கட்டும், நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம்: சீமான்

Seeman
விஜய் அவர் வேலையை பார்க்கட்டும், நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், "யார் கூட்டணிக்கும் நான் காத்திருக்கவில்லை. எனக்கு ஒரு கனவு இருக்கிறது, அதை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும், தேசிய மற்றும் திராவிடக் கட்சிகள் தவிர்த்து ஏற்போம்."
 
தவெக தலைவர் விஜய் எங்கள் அரசியல் சரி என்று ஏற்றுக்கொண்டு வந்தால், ஏற்போம். இல்லையென்றால், அவர் வேலையை அவர் பார்க்கட்டும், நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம் என புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தார்.
 
விஜய் மற்றும் சீமான் அரசியல் கட்சிகளின் கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்றும், நேற்று பெரியார் நினைவிடத்திற்கு மாலை மரியாதையை விஜய் செய்தது சீமானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும், திராவிட அரசியலை நோக்கி செல்லும் விஜய்யுடன் சீமான் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran