வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (17:10 IST)

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது என இயக்குனர் மோகன் ஜி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

"கோட் படம் பார்த்தேன், அது எனக்கு மிகவும் பிடித்தது. வெங்கட் பிரபு இந்த படத்தை சிறப்பாக இயக்கியிருந்தார். இதில் விஜயகாந்தை 'ஏஐ' மூலம் உருவாக்கியதைப் போல, நான் நடிகர் சிவாஜி கணேசனை 'ஏஐ'ல் உருவாக்க வேண்டும் என்ற ஆசை கொண்டேன். திரையுலகம் முழுவதும் அவரை மிஸ் செய்கிறது. அவர் போன்ற நடிகர் இன்றைக்கு இல்லை.

விஜய்யின் அரசியல் வருகை நல்லது என்றாலும், அவர் தவறான பாதையில் செல்கிறாரோ என்ற சந்தேகம் இருக்கிறது. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல், ஓணத்துக்கு வாழ்த்து சொன்னது வருத்தமாக இருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்வது வேறு. பாஜகவுக்கு ஆதரவளிப்பது வேறு. இரண்டையும் ஒரே மாதிரியாகக் கருதும் மனநிலையை விட்டுவிட்டால், பலரும் வெளிப்படையாக வாழ்த்துக்களை சொல்வார்கள்’ என்று மோகன் ஜி கூறினார்

Edited by Siva