திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (09:59 IST)

ரஜினியின் கருத்துக்கு சீமானின் பொறுப்பற்ற பேச்சு: நெட்டிசன்கள் ஆவேசம்!

நேற்று நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் புத்தகம் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பேசியபோது அமித் ஷா மற்றும் மோடியை கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனருக்கு உவமையாக ஒப்பிட்டு பேசினார்
 
ரஜினியின் இந்த பேச்சு பெரும்பாலானவர்களை சிந்திக்கவைத்ததோடு சிலரை மட்டும் ஆத்திரப்படுத்தி உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ரஜினியின் இந்த பேச்சுக்கு பொறுப்பற்ற முறையில் சீமான் கருத்து தெரிவித்துள்ளதாக நெட்டிசன்கள் ஆவேசம் தெரிவித்துள்ளார் 
 
இது குறித்து சீமான் கூறியதாவது, 'ரஜினி சொல்வது எல்லாம் சரிதான். கிருஷ்ணரும் அர்ஜுனனும் யார் மீது போர் தொடுக்க போகிறார்கள் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது. அவர்கள் அனேகமாக மக்கள் மீதும் தான் போர் தொடுப்பார்கள் என்று நினைக்கின்றேன். அவதாரமாக பிறகு இருக்கலாம். முதலில் நல்ல மனிதர்களாக இருங்கள் என்றும், மோடியும் அமித் ஷாவும் நல்ல மனிதர்களாகவும், தலைவர்களாகவும் இருந்தாலே போதும், மக்கள் நல்ல நிலையில் இருப்பார்கள் என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார் 
 
விடுதலைப்புலிகளின் பெயரை சொல்லி மக்களை சீமான் ஏமாற்றி வருவதாக சக அரசியல்வாதிகளான வைகோ, ராம்தாஸ் ஆகியோர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் முதலில் சீமான் ஒரு நல்ல மனிதராகவும், தலைவராகவும் மாறிவிட்டு பிறருக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மக்கள் ஆதரவின்றி பல வருடங்களாக டெபாசிட் கூட வாங்க முடியாத ஒரு கட்சி தலைவர் நாட்டை ஆட்சி செய்து வரும் தலைவர்களை விமர்சனம் செய்வதா? என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.