திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2020 (16:13 IST)

சார் விஜயலட்சுமி... கேவலங்களுக்கு பதில் சொல்ல முடியாது: சீமான் காட்டம்!!

நடிகை விஜயலட்சுமி குறித்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார். 
 
ப்ரண்ட்ஸ், பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் விஜயலட்சுமி. இவர் நாம் தமிழர் ஒங்கிணைப்பாளர் சீமான் மீது, பல புகார்களை எடுத்து கூறியுள்ளார். அதேசமயம், சமீபத்தில் இரு வீடியோக்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
மேலும், சீமானின் தம்பிகளை மவுத் பீஸ் என விமர்சித்தார். சீமான் தனது ஆதரவாளர்களை விட்டு தன்னை மிரட்டி வருவதை நிறுத்தாவிட்டால் ஒவ்வொரு ரகசியங்களை வெளிப்படுத்திவிட்டு எனது சாவுக்கு காரணம் சீமான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொள்வேன் விஜயலட்சுமி மிரட்டல் விடுத்துள்ளார்.
 
இந்நிலையில், சமீபகாலமாக நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு எதிராக பல்வேறு புகார்களை கூறிவருகிறாரே என செய்தியாளர் சந்திப்பில் சீமானிடம் கேட்ட போது, இதுவரை கேள்விகள் கேட்டீர்கள் பதில் சொன்னேன். இப்போது இதுபோன்ற கேவலங்களுக்கு பதில் சொல்ல முடியாது என இடத்தை விட்ட நகர்ந்தார்.