புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2020 (13:38 IST)

சசிகலா எங்காளு... சீமான் சர்ச்சை பேச்சு!!

ரஜினிகாந்த் உங்காளு, சசிகலா எங்காளு என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. 

 
நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக தாம்பரம், நாம் தமிழர் சமூக ஊடக ஆர்வலர்களுக்கான நிகழ்வு நடைபெற்றது. இதில் இக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது அவரை ரஜினியை சீண்டும் விதமாக பேசியதோடு, சசிகலாவை எங்காளு என்றும் குறிப்பிட்டார். சீமான் பேசியதாவது, 
 
தூத்துக்குடி போராட்டம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அன்று தூத்துக்குடிக்கு செல்ல முடிந்த ரஜினியால் இன்று ஏன் செல்ல முடியவில்லை? நான் வந்தால் ரசிகர்கள் கூடி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்கிறார். 
ரசிகர்கள் கூட்டமா வருவாங்களா, இல்லை குண்டோட வருவாங்களா? சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கிற மாதிரிதான் ரசிகர்களை தயார் பண்ணி வச்சுருக்கீங்களா? என கேள்வி எழுப்பினார். 
 
அதோடு, சசிகலாவுக்கு ஒரு நீதி, ரஜினிகாந்துக்கு ஒரு நீதி. வருமான வரி வழக்குல சசிகலாவை சிறையில் அடைத்துள்ளனர். ரஜினிகாந்துக்கு விலக்கு அளித்துள்ளது. ஏனென்றால் சசிகலா எங்காளு, ரஜினிகாந்த் உங்காளு என்று பேசினார். இந்த பேச்சு தற்போது சர்சைக்குள்ளாகி உள்ளது.