ஒரு தொகுதியை கூட கைப்பற்றாத நாம் தமிழர் கட்சி: 10 வருடங்கள் கட்சி நடத்தி என்ன பயன்?
தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக ஒரு அணியாகவும், அதிமுக ஒரு அணியாகவும் போட்டியிட்டன. இந்த இரண்டு அணியையும் எதிர்த்து சீமானின் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 399 இடங்களில் திமுகவும், 344 இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளன. தினகரனின் அமமுக 14 இடங்களிலும் சுயேட்சைகள் மற்றும் மற்றவர்கள் 17 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்
இந்த நிலையில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009 ஆம் ஆண்டு கட்சி தொடங்கி இதுவரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டு டெபாசிட் கூட வாங்க முடியாத கட்சியாக நாம் தமிழர் கட்சி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
சுயேச்சைகள் கூட வெற்றி பெறும் கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத ஒரு கட்சியை கடந்த பத்து வருடங்களாக சீமான் நடத்தி வருகிறார். ஒரு அரசியல் கட்சி என்றால் தங்களுடைய கட்சியின் கொள்கைகளை மட்டும் பரப்பவேண்டும் என்பதை மறந்துவிட்டு மற்ற கட்சியை விமர்சனம் செய்தும் தனிநபரை தூற்றியும், பிரிவினைவாத அரசியல் செய்து வரும் சீமானே இந்த தோல்விக்கு முழு பொறுப்பு என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இனிமேலாவது மற்ற கட்சி தலைவர்களையும் மற்றவர்களையும் அநாகரீகமாக விமர்சனம் செய்வதை தவிர்த்துவிட்டு தனது கட்சியின் வளர்ச்சி கொள்கைகளைமட்டும் அவர் மேடையில் பேச வேண்டும் என்பதே அவரது கட்சி தொண்டர்களே விரும்பும் ஒரு விஷயமாகும்