திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 ஜனவரி 2020 (17:42 IST)

உள்ளாட்சி தேர்தலில் வென்ற மூதாட்டி! மதுரையில் ஆச்சர்யம்!

தமிழக ஊராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் மூதாட்டி ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதற்கான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரிட்டாப்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 79 வயது மூதாட்டி வீரம்மாள் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் எதிர் வேட்பாளரைவிட 195 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ள வீரம்மாள் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சி தலைவர் பதவி வகிப்பவர்களில் மிகவும் அதிக வயது கொண்ட நபராக வீரம்மாள் இருப்பார் என கூறப்படுகிறது.