1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 ஜூன் 2021 (14:49 IST)

நீட் தேர்வை இன்னைக்கே ஒழிச்சு கட்டணும்! – சீமான் கோரிக்கை

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் காலை ஆளுனர் உரையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில் ஆளுனர் அறிவிப்புகள் திருப்தி அளிக்கவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்து பதிவிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் “நாட்டின் பன்முகத்தன்மைக்கெதிராகவும், கூட்டாட்சிக்கெதிராகவும் கொண்டுவரப்பட்ட நீட் எனும் மத்தியத்தர ஒற்றைத்தகுதித்தேர்வு மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் உழைக்கும் ஆதி தமிழ்க்குடிகளின் பிள்ளைகளை மருத்துவராகவிடாது தடுக்கும் மனுதர்மத்தின் நவீன வடிவான ‘நீட்’ தேர்வை முற்று முழுதாகத் துடைத்தெரிய இன்றைக்குக் கூடியிருக்கிற முதல் தமிழகச் சட்டமன்றக் கூட்டத்திலேயே ஒரு முடிவு எட்டப்படவேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.