மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தோம்.. குவியும் புகார்கள்! – போலீஸார் அதிர்ச்சி!

Madan OP
Prasanth Karthick| Last Modified திங்கள், 21 ஜூன் 2021 (14:38 IST)
யூட்யூபில் ஆபாசமாக பேசிய வழக்கில் கைதான பப்ஜி மதன் மீது பலரும் பண மோசடி புகார்கள் அளித்துள்ளனர்.

யூடியூபர் மதன் ஓபி சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாகவும் இளம் பெண்களை பாலியல் வன்முறைக்கு தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மதன் தலைமறைவாக இருந்த நிலையில் தர்மபுரியில் போலீசார் அவனை கைது செய்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதனிடையே, பப்ஜி மதனிடம் ஏமாந்து பணத்தை இழந்தவர்கள் [email protected]ல் புகாரளிக்கலாம் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக 100க்கும் மேற்பட்டோர் மின்னஞ்சல் மூலமாக புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :