1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 21 அக்டோபர் 2017 (10:17 IST)

சீமானின் அன்புத்தம்பியாக மாறிவிட்ட விஜய்-அட்லி

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில வருடங்களாக கூறி வந்த கருத்துக்களை விஜய்யும் அட்லியும் ஒரே படத்தில் கூறி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டதாக கூறப்படுகிறது.



 
 
இலவச மருத்துவம், இலவச கல்வி குறித்து பல மேடைகளில் சீமான் பேசியதைத்தான் விஜய்யும் அட்லியும் மெர்சல் படத்தில் பொதுமக்களுக்கு எளிமையாக புரியும்படி 'மெர்சல்' படத்தில் கூறியுள்ளனர்.
 
இந்த நிலையில் விஜய், அட்லி ஆகிய இருவரையும் அன்புத்தம்பி என்று அழைத்து இருவருக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். சீமான் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது, 'தரமான இலவச மருத்துவத்தின் தேவையை வலியுறுத்தி தடைகள் பல தாண்டி வெளிவந்திருக்கும் மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற அன்புக்குரிய தம்பி விஜய், இயக்குனர் தம்பி அட்லீ மற்றும் இப்படத்தை உருவாக்க உழைத்திட்ட அனைத்து படக்குழுவினர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்' என்று சீமான் தெரிவித்துள்ளார்.