செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2017 (21:44 IST)

அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த விஜய் - அஜித் ரசிகர்கள்!!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியானது மெர்சல் திரைப்படம். இந்த படம் பல சாதனைகளை முறியடித்து வருகிறது. 


 
 
படத்தில் மத்திய, மாநில அரசுகளை  விளாசியிருக்கிறார் விஜய். மத்திய அரசு அமல்படுத்திய ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்த வசனங்களும் இடம் பெற்றிருக்கின்றன. 
 
இந்த வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக-வை சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் போர்கொடி தூக்கியுள்ளனர்.
 
இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக அஜித் ரசிகர்களும் குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். அஜித், விஜய் ரசிகர்களுக்குள் மோதல் போக்கு இருப்பது சாதரனமான ஒன்றுதான்.
 
ஆனால், படத்தில் இருந்த வசனங்கள் சற்று நிதர்சனமான உண்மையாக இருந்ததால் அஜித் ரசிகர்களும் விஜய்க்கு ஆதரவு தந்து வருகின்றனர்.