செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 20 டிசம்பர் 2019 (08:33 IST)

”வன்முறை செய்தது யார்?” ரஜினி மீது பாயும் சீமான்

பிரச்சனைகளுக்கு வன்முறை தீர்வாகாது என ரஜினி கூறிய நிலையில், வன்முறை செய்தது யார்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பலர் போராடி வரும் நிலையில் ஆங்காங்கே போலீஸாருடன் ஏற்பட்ட கைகலப்பில் வன்முறையும் வெடித்தன. மேலும் மங்களூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.

இந்நிலையில் ”எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக்கூடாது, இப்பொழுது நடந்துக் கொண்டிருக்கும் வன்முறைகள் மனதிற்கு வேதனை அளிக்கிறது” எனவும் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

தற்போது ரஜினியின் கருத்து குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார், அதில் “பிரச்சனைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான், ஆனால் வன்முறை செய்தது யார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

”அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதை விட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது” எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.