1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 19 டிசம்பர் 2019 (22:08 IST)

கமலுடன் இணைக்கம்: பிரசாந்த் கிஷோரின் திட்டமா?

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாத அரசியல் களத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் எளிதில் ஆட்சியை கைப்பற்றி முதல்வர் ஆகி விடுவார் என ஒவ்வொரு திமுக தொண்டர்களூம் எதிர் பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் நடைபெற்றுவரும் அதிமுக அரசை முக ஸ்டாலினால் கவிழ்க்க முடியவில்லை. பாஜக பின்னணியில் இருப்பதால் அவரது முயற்சி எடுபடவில்லை என்று கூறப்பட்டது
 
இந்த நிலையில் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று திமுக கருதுகிறது. ஆனால் இதற்கு கமல் மற்றும் ரஜினியின் திடீர் அரசியல் வருகை பாதகமாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக கமல் மற்றும் ரஜினி ஆகியோர் இணைந்து அரசியலில் செயல்படவிருப்பதாக வெளிவந்த தகவல் திமுகவை ரொம்பவே அதிர்ச்சி அடையச் செய்தது 
 
இதனை அடுத்து பிரசாந்த் கிஷோர் திமுகவுக்கு தேர்தல் ஆலோசகரானார். அவருடைய ஆலோசனையின் படி தற்போது திமுக நடந்து வரும் நிலையில் முதல் கட்டமாக கமல் ரஜினியை பிரிக்க டாஸ்க் கொடுக்கப்பட்டதாகவும் அதன்படி தான் தற்போது திமுக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ள கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
இதன்படி ரஜினியிடம் இருந்து கமல்ஹாசனை பிரித்து அவரை தனது கூட்டணியில் இணைத்துக் கொண்டால், தனியாக இருக்கும் ரஜினியால் திமுகவை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் பிரசாந்த் கிஷோரின் ஐடியா என்று கூறப்படுகிறது இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்