சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பணகுடி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மேய்ச்சல் நில உரிமையை நிலைநாட்ட நடத்தவிருந்த போராட்டத்திற்கு, காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணத்தை அதிரடியாக வெளிப்படுத்தியுள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "பணகுடி மேய்ச்சல் நிலப்பகுதியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு சொந்தமான நிலம் இருக்கிறது. நான் அங்கு சென்றால் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சத்தினாலேயே காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது" என்று குற்றம் சாட்டினார். இதனால், சீமான் தங்கியிருந்த இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டதால், அவரால் போராட்டத்திற்கு செல்ல முடியவில்லை.
அத்துடன், மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளுக்கு அனுமதி வழங்காமல் கல் குவாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதையும் அவர் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் ரூ. 10 லட்சம் கோடி கடன் இருப்பதாகக் குறிப்பிட்ட சீமான், திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு கொள்கை மாற்றம் இல்லை என்றும், வாக்குக்கு பணம் கொடுக்காத மாற்று அரசியல் தமிழகத்திற்குத் தேவை என்றும் வலியுறுத்தினார்.
Edited by Siva