வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2017 (15:35 IST)

18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லாது - முன்னாள் சபாநாயகர்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகு நீக்கம் செய்திருப்பது சட்டப்படி செல்லாது முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா தெரிவித்துள்ளார்.


 

 
தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் இன்று நடவடிக்கை எடுத்துள்ளார். இந்திய அரசியலைப்பு சட்டம் 10வது அட்டவணைப்படி, கட்சி மாறுதல் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தனபால் அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா “10வது அட்டவணையில் உள்ள ‘ஏ’ பிரிவின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அந்த விதிப்படி கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்கு தாவினால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எந்த கட்சிக்கும் செல்லவில்லை. 6வது விதியின் உட்பிரிவு 5-ன் கீழ் கட்சியை விட்டு வெளியேறியதற்கான ஆவணத்தை இணைக்க வேண்டும். ஆனால், இவர்கள், ஆளுநரிடம் 18 எம்.எல்.ஏக்கள் கொடுத்த கடிதத்தின் நகலை இணைத்துள்ளனர். இதுவே மாபெரும் தவறு. 
 
கொறடாவின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். கொறடாவின் உத்தரவு சட்டசபைக்குள் மட்டுமே செல்லும். எனவே, இவர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது. இது அரசியலைமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது. 
 
இந்த விவகாரம் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கொறடா ராஜேந்திரன் மற்றும் சபாநாயகர் தனபால் ஆகிய அனைவருக்கு பிரச்சனைகளில் சிக்குவர்” என அவர் கூறினார்.