1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (10:11 IST)

ஓமந்தூரார் தோட்டத்துக்கு மாறுகிறதா தமிழக அரசின் தலைமை செயலகம்? முதல்வருக்கு கோரிக்கை..!

தமிழக அரசின் தலைமைச் செயலகத்திற்காக கட்டப்பட்ட ஓமந்தூரார் கட்டிடம் அதன் பின்னர் ஜெயலலிதா ஆட்சியில் பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஓமந்தூரார் கட்டிடத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது 
 
 கருணாநிதி முதல்வராக இருந்தபோது தலைமை செயலத்தை இடம் மாற்றும் வகையில் அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் கட்டிடம் கட்டினார். ஆனால் அதிமுக ஆட்சி வந்த பிறகு அது மருத்துவமனையாக மாற்றப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் ஓமந்தூரார் தோட்டத்திற்கு தலைமைச் செயலகத்தை மாற்ற வேண்டும் என தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  
 
தற்போது இருக்கும் தலைமை செயலக கட்டிடம் உறுதி தன்மை இல்லாமல் இருப்பதால் ஓமந்தூரார் வளாகத்தில் தலைமை செயலகத்தை விட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் இது குறித்து என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran