1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 2 செப்டம்பர் 2020 (19:44 IST)

மாநிலம் முழுவதும் பேருந்து சேவை: தலைமைச் செயலாளர் முக்கிய ஆலோசனை

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவை தொடங்கப்பட்ட நிலையில் சற்று முன் மாநிலம் முழுவதும் பேருந்து சேவை தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது 
 
அதுமட்டுமின்றி மெட்ரோ ரயிலில் பயணிகள் ரயிலும் மாநிலம் முழுவதும் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்கள் வரும் 4ஆம் தேதி இது குறித்து ஆலோசனை செய்ய உள்ளார் 
 
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காணொளி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் வரும் 4ஆம் தேதி மாலை 4 மணிக்கு இந்த ஆலோசனை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவை தொடக்கம் குறித்து இந்த ஆலோசனையில் முக்கிய இடம்பெறும் என்றும் மாநிலம் முழுவதும் பேருந்து சேவை தொடங்குவதற்கான வழிமுறைகள் என்னென்ன அறிவிக்கலாம் என்பது குறித்த ஆலோசனையை நடத்தப்படும் என்றும் தெரிகிறது