புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (09:54 IST)

மார்ச் மாதம் எடுத்த ரூ.1000 பாஸ் செல்லுமா? போக்குவரத்து துறையின் அறிவிப்பு

மார்ச் மாதம் எடுத்த ரூ.1000 பாஸ் செல்லுமா?
ஐந்து மாதங்களுக்குப் பின்னர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை முதல் சென்னையில் மட்டும் 3000 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், தமிழகம் முழுவதும் 24 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
மேலும் பயணிகளுக்கும் பேருந்து மற்றும் ஓட்டுனர்களுக்கும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் இதனை அடுத்து மார்ச் மாதம் எடுத்த ஆயிரம் ரூபாய் பாஸ் பயணிகள் பயன்படுத்த முடியாமல் போனது 
 
இந்த நிலையில் தற்போது இது குறித்து அறிவிப்பு ஒன்றை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது சென்னையில் மார்ச் மாதம் எடுத்த ஆயிரம் ரூபாய் பாஸை செப்டம்பர் 15 வரை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும் எனபோக்குவரத்து துறை அறிவித்துள்ளது
 
மார்ச் மாசம் எடுத்த பாஸ், பொதுமுடக்கம் காரணமாக ஒரு வாரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதால் அதற்கு பதிலாக தற்போது செப்டம்பர் 15 வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது