திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (16:08 IST)

பறிமுதல் செய்த 400 கிலோ கடல் அட்டை மாயம்; வனசரக ஊழியர் தலைமறைவு!

Kadal Attai
நாகையில் பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ கடல் அட்டை மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டிணம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அவ்வபோது முறைகேடாக கடல் அட்டை இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவது கண்டறியப்பட்டு தடுத்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2020ம் ஆண்டில் அவ்வாறாக கடந்த முயன்ற 1060 கிலோ கடல் அட்டையை நாகப்பட்டிணம் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 1060 கிலோ கடல் அட்டையும் 12 பெட்டிகளில் நாகை வன உயிரின பாதுகாவலர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் நீதிமன்ற நடவடிக்கைக்காக கடல் அட்டை இருப்பை ஆய்வு செய்தபோது அதில் 400 கிலோ கடல் அட்டை மாயமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் வனசரகர் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றிய கோவிந்தராஜ் என்பவர் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ள நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.