அம்பேத்கரின் பிறந்தநாள் இனி சமத்துவ நாள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இந்திய சட்டமேதை அம்பேதரின் பிறந்தநாள் இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்திய சட்டமேதையும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவருமான அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “அம்பேத்கர் இந்திய அமைப்பில் வேண்டாதவற்றை நீக்கிய சிற்பி. வேண்டியவற்றை தீட்டிய ஓவியர். அவரது பிறந்தநாளில் இனி தமிழகத்தில் சமத்துவ உறுதி மொழி ஏற்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ”அண்ணல் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் தமிழக அரசால் மொழிபெயர்ப்பு செய்யப்படும். அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவருக்கு முழு உருவ வெண்கல சிலை நிறுவப்படும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.