ஞாயிறு, 3 டிசம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (13:56 IST)

ஜாலியா படத்துக்கு போங்க! லீவுடன் பீஸ்ட் டிக்கெட்டும் குடுத்த ஐடி நிறுவனம்!

இன்று பீஸ்ட் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் சென்னை ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்டுடன் விடுமுறையும் வழங்கியுள்ளது.

விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர் தயாரித்துள்ள இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. காலை 4 மணிக்கே முதல் காட்சி தொடங்கிய நிலையில் ரசிகர்கள் ஆர்வமாக சென்று படத்தை பார்த்து வருகின்றனர்.

பீஸ்ட் படத்தை பார்க்க பணியாளர்கள் பொய் சொல்லி விடுமுறை எடுப்பதை தவிர்ப்பதற்காக சென்னையை சேர்ந்த ஆரா இன்போமேட்டிக்ஸ் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு இன்று முழு விடுப்பு வழங்கியதுடன், பீஸ்ட் படத்திற்கான டிக்கெட்டுகளையும் வழங்கியுள்ளது. இந்த சம்பவம் வைரலாகியுள்ளது.