செவ்வாய், 1 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (10:08 IST)

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் சரிந்தது பங்குச்சந்தை.. இன்றைய நிஃப்டி நிலவரம்..!

share
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஏற்றத்தில் இருந்த நிலையில், தற்போது மீண்டும் சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த வகையில், நேற்று ரம்ஜான் தினம் என்பதால் பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் பின்னணியில், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச் சந்தை குறைந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 263 புள்ளிகள் சரிந்து, 77,150 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையான நிப்டி 37 புள்ளிகள் சரிந்து, 23,048 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
 
இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் இண்டஸ் இண்ட் வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, ஸ்டேட் வங்கி, ஐடிசி, ஹிந்துஸ்தான் லீவர், டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், ஐசிஐசிஐ வங்கி, டைட்டான், பஜாஜ் பைனான்ஸ், கோடக் மகேந்திரா வங்கி, விப்ரோ, சன் பார்மா, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, எச்சிஎல் டெக்னாலஜி, டிசிஎஸ், இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva