அவுரங்கசீப்பின் கல்லறை சர்ச்சை தேவையற்றது: ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கருத்து..!
கடந்த சில நாட்களாக அவுரங்கசீப் கல்லறை விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வரும் நிலையில், அவுரங்கசீப் கல்லறை விவகாரம் தேவையற்றது என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில், "அவுரங்கசீப் இங்கே மரணம் அடைந்தார் என்பதால் தான் அவரது கல்லறை இங்கே கட்டப்பட்டது. மகாராஜ் சத்ரபதி சிவாஜி மகாராஜா அப்சல் கானின் கல்லறையை கட்டி நமக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். இது இந்தியாவின் பரந்த மனப்பான்மையை காட்டுகிறது.
எனவே, அவுரங்கசீப் கல்லறை எங்கே இருக்கிறதோ, அது அங்கே அப்படியே இருக்கட்டும். அதை பார்க்க விரும்புபவர்கள் தாராளமாக வந்து பார்க்கலாம். இந்த கல்லறை குறித்த சர்ச்சை எழுப்புவது தேவையற்ற ஒன்று" என்று கூறினார்.
ஆனால், அதே நேரத்தில் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இது தொடர்பாக சமீபத்தில் நாக்பூரில் கலவரம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran