இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை நாடு முழுவதும் வெயில் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக, மும்பையில் மிக பயங்கரமாக வெயில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வரும் நிலையில், ஆய்வு மையம் இந்த ஆண்டு கோடை வெப்பம் ஜூன் வரை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
தமிழகம் உள்பட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், ஏப்ரல் முதல் ஜூன் வரை, வடக்கு மற்றும் கிழக்கு, மத்திய இந்தியாவில், வடமேற்கு சமவெளி பகுதிகளிலும் வழக்கத்தை விட கூடுதலாக வெப்ப அலை நாட்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய பகுதிகளில் ஜூன் மாதம் வரை வெப்பம் நிலவும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran