1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2019 (08:49 IST)

தனிமரமான தினகரன்: திமுக பக்கம் கவிழ்ந்த எஸ்.டி.பி.ஐ!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக கூட்டணியில் இருந்து விலகி திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக எஸ்.டி.பி.ஐ அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அடுத்த மாதம் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடைத்தேர்தலில் களமிறங்கியுள்ளது. 
 
திமுக மற்றும் அதிமுகவிற்கு போட்டியாக நாம் தமிழர் கட்சியும் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளது. இந்த இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்திருந்தது.  
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களாக பலர் விலகி வரும் நிலையில், கடந்த இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ தற்போது கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. 
 
ஆம், சமீபத்தில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாக கூட்டத்தில், திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.