கொரோனா மையங்களாக மாறும் சென்னை பள்ளிகள்!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கட்டுக்கடங்காமல் கொரோனா வைரஸ் பரவி வருவது சுகாதாரத் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது
இந்த நிலையில் சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க மருத்துவமனைகள் இடமில்லை என்ற நிலையில் தற்போது தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே வர்த்தக மையத்தில் நூற்றுக்கணக்கான படுக்கைகள் கொண்ட கொரோனா மையம் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளையும் கொரோனா மையமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது
இதுகுறித்து தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல் ஒன்றில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளிலும் கொரோனா சிகிச்சை மையங்களாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. எனவே கூடிய விரைவில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகள் கொரோனா மையங்களாக மாற்றப்படும் என இதிலிருந்து தெரியவருகிறது