கொரோனாவில் இருந்து குணமானார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

vijaya baskar
vijaya baskar
siva| Last Updated: வெள்ளி, 14 மே 2021 (17:52 IST)
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் கொரோனா முதல் அலையின்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தியவருமான விஜயபாஸ்கருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்

இந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை எடுத்ததில் நெகட்டிவ் ரிசல்ட் வந்திருப்பதாகவும் இதனையடுத்து அவர் பூரண குணம் அடைந்து விட்டார் என்றும் அதனால் அவர் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் கூறியபோது ’நான் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளேன். இருப்பினும் ஒரு சில நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவர்கள் மற்றும் எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியும். அனைவரும் மாஸ்க் அணிந்து கைகளை அடிக்கடி கழுவி பாதுகாப்பாக இருங்கள் என்று விஜய் பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

இதில் மேலும் படிக்கவும் :