2 டோஸ் தடுப்பூசி போட்டும் பலியான காவலர்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

vaccine
2 டோஸ் தடுப்பூசி போட்டும் பலியான காவலர்: அதிர்ச்சியில் பொதுமக்கள்
siva| Last Updated: வெள்ளி, 14 மே 2021 (18:08 IST)
கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா பாதித்தாலும் உயிருக்கு ஆபத்து இருக்காது என்று மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கூறி வரும் நிலையில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டும் காவலர் ஒருவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு வாரங்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று அவர் பரிதாபமாக பலியானார். அவரது உடல் உறுப்புகள் பல செயல் இழந்ததால் அவர் காலமானதாக மருத்துவர் தரப்பில் கூறப்பட்டது

இவ்வளவுக்கும் அவர் வைரஸ் தடுப்பூசி இரண்டு டோஸ்கள் போட்டு உள்ளார் என்பதும் அப்படி இருந்தும் அவர் கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதக காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :