தற்காலிக தகன மேடை: மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தல்
கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மயானத்தில் நீண்ட வரிசையில் பிணங்கள் அடக்கம் செய்ய காத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் ஒன்றை செய்து உள்ளது. இதன்படி இறந்தவர்களின் உடல்களை விரைவாக எரியூட்ட தற்காலிக தகன மேடை அமைக்க வேண்டும் என்றும் சடலங்களை எடுத்துச் சொல்லும் ஆம்புலன்ஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது
மேலும் கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை கண்ணியமாக அடக்கம் செய்ய வேண்டும் என்றும் தேசிய மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு மயானங்களில் நீண்ட வரிசையில் இருப்பது குறித்த செய்திகள் வெளியானதை அடுத்து தேசிய மனித உரிமை ஆணையம் இந்த அறிவுறுத்தலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது