1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 1 செப்டம்பர் 2021 (15:56 IST)

மீண்டும் பள்ளிகள் தொடக்கம்....மாணவர்கள் மகிழ்ச்சி

கொரொனா பரவலை அடுத்து இந்தியாவில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன. இதையத்து, மாணவர்களின் நலனைக் கருத்தில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, தகுந்த பாதுகாப்புடன் பள்ளிகள் மீண்டும் செயல்படும் என அறிவித்தது.

அதில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, நீண்ட நாட்கள் கழித்து இன்று காலையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்க பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9 முதல்  +2 வரையிலான வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படுள்ளதால் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.