வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 19 ஜூன் 2021 (20:00 IST)

பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது !

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவலை அடுத்து இந்தியா முழுவதிலும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லை வாயிலாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில்  மாணவர்களின் சேர்க்கைக்கு எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த 14 ஆம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டன. கடந்த இரு ஆண்டுகளாக கொரொனா ஊரடங்கால் வாழ்வாரம் இழந்துள்ள குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முடிவு செய்துள்ளனர். எனவே நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் 3 லட்சம் மாணவர்கள் சேர்வார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளதால், தமிழகப் பள்ளிக் கல்வித்துறை மாணவர் சேர்க்கைக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.