ஒரே நேரத்தில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை.. சென்னையில் பரபரப்பு..!
சென்னையின் ஒரு சில பகுதிகளில் ஒரே நேரத்தில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகிய இரண்டு துறைகளின் அதிகாரிகள் சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக திமுக அமைச்சர்கள் திமுகவுக்கு நெருக்கமானவர்கள் திமுகவுக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் உள்ளிட்டோர்களின் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்று சென்னை கே கே நகர் 80ஆவது தெரு ரமணியம் குடியிருப்பில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. அதேபோல் சென்னை யானைக்கவுனியில் கவர்லால் மருந்து நிறுவன உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் மருந்து நிறுவன உரிமையாளர் லால் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை சோதனை நடந்து வருவதாக தெரிகிறது. ஏற்கனவே லால் வீடு, அலுவலகங்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை சோதனை செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran