1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 13 days holidays in January

ஜனவரி மாதத்தில் 13 நாட்கள் விடுமுறை தினங்களா?

ஜனவரி
ஜனவரி மாதத்தில் மொத்தம் 31 நாட்கள் இருக்கும் நிலையில் அதில் 13 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் அளிக்கப்பட்டுள்ள விடுமுறை தினங்கள் குறித்த விபரங்கள் பின்வருமாறு
 
ஜனவரி 1ம் தேதி - சனிக்கிழமை : புத்தாண்டு தினம். நாடு முழுவதும் விடுமுறை.
ஜனவரி 2ம் தேதி - ஞாயிற்றுகிழமை: மன்னம் ஜெயந்தி. கேரள பண்டிகை.
ஜனவரி 9ம் தேதி - ஞாயிற்றுகிழமை : சண்டிகர், ஹரியானாவில் குரு கோவிந்த் சிங் ஜெயந்தி கொண்டாடப்படும்.
ஜனவரி 11ம் தேதி - செவ்வாய்கிழமை: மிஷனரி தினம். மிசோரம் மாநிலத்தில் விடுமுறை.
ஜனவரி 12ம் தேதி - புதன்கிழமை: மேற்கு வங்கத்தில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி கொண்டாடப்படும்.
ஜனவரி 14ம் தேதி - வெள்ளிக்கிழமை: மக் பிகு, மகர சங்கராந்தி, துசு பூஜை. இந்த பண்டிகை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 14ம் தேதி - வெள்ளிக்கிழமை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை.
ஜனவரி 15ம் தேதி - சனிக்கிழமை: பொங்கல் பண்டிகை/ திருவள்ளுவர் தினம். தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் கொண்டாடப்படும்.
ஜனவரி 16ம் தேதி - ஞாயிற்றுகிழமை: கனும பண்டிகை, உழவர் திருநாள். ஆந்திரப் பிரதேசம், பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொண்டாடப்படும்.
ஜனவரி 23ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி மேற்கு வங்காளம், திரிபுரா, ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்களில் விடுமுறை.
ஜனவரி 25ம் தேதி - செவ்வாய்கிழமை: இமாச்சல பிரதேசத்தில் மாநில தினம்
ஜனவரி 26ம் தேதி - புதன்கிழமை: குடியரசு தினம். பொது விடுமுறை.
ஜனவரி 31ம் தேதி - திங்கட்கிழமை: மீ-டேம்-மீ-ஃபை. அசாம் மாநிலத்தில் கொண்டாடப்படும்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
சென்னையில் 100 கடைகளுக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்: பெரும் பரபரப்பு!