திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (21:35 IST)

மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி!

flash
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மாணவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில்  தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.சில மாவட்டங்களில் வளிமண்டலக் காற்றழுத்தம் காரணமாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

இந்த  நிலையில், ராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள  நயினார் கோவில் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த  11 ஆம் வகுப்பு மாணவன் கஜினி மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.

பலத்தை காயம் அடைந்த மாணவனை சக மாணவர்கள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.