பள்ளி மாணவன் பரிதாப பலி...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள அரியதிடல் கிராமத்தைச் சேர்ந்தவர் அமானுல்லா.
இவரது மகன் முகமது ஆதில்(16). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வந்தார்.
இன்று காலையில் பள்ளிக்குச் செல்ல நரசிம்புரத்தில் இருந்து கும்பகோணம் நோக்கிச் செல்லும் அரசு டவுன் பஸ்ஸில் ஓடிச் சென்று ஏற முயன்றார்.
அப்போது நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர் மாணவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.