புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 15 மே 2019 (09:43 IST)

மாற்றுச்சான்றிதழில் சாதி தேவையில்லை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாற்றுச்சான்றிதழில் சாதி குறிப்பிடத் தேவையில்லை என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் இப்போது மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாற்றுச்சான்றிதழ்களில் மாணவர்களின் சாதிப் பற்றி குறிப்பிடத் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சாதி எனும் இடத்தில் சாதிச் சான்றிதழைப் பார்க்கவும் எனக் குறிப்பிடச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனியாக சாதிச் சான்றிதழை வருவாய்த் துறை வழங்குவதால் பள்ளி மாற்றுச்சான்றிதழில் அதைக் குறிப்பிட வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெற்றேரோ மாணவரோ விரும்பினால் சாதியற்றவர் எனக் குறிப்பிடலாம எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின் பேரில் இப்போது சாதிப் பற்றிக் குறிப்பிடாமல் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.