செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 25 நவம்பர் 2022 (07:49 IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் கைது!

arrest
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்
 
சென்னையை அடுத்த திருநின்றவூர் என்ற பகுதியில் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக அந்த பள்ளியின் தாளாளர் வினோத் மீது மாணவ மாணவிகள் குற்றம்சாட்டினார். 
 
இதனை அடுத்து பள்ளி தாளாளரை கைது செய்ய வேண்டும் என மாணவ மாணவிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
 
இந்த நிலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட வினோத் திடீரென தலைமறைவானதால் அவரை போலீசார் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு கவுன்சிலிங் தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
Edited by Siva