வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (08:20 IST)

தமிழகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை.. விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததை அடுத்து விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
நேற்றிரவு தமிழகத்தின் சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம் உள்பட சில பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் கனமழை பெய்தது. இதனால், குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கன்னியாகுமரி, திருவட்டாறு, சித்திரங்கோடு உள்ளிட்ட பகுதிகளலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
அதேபோல் தேனி, பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மழை வெளுத்து வாங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 
Edited by Siva