வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 23 அக்டோபர் 2018 (15:14 IST)

டிரைவர்கள் செய்த வேலையால் பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம் !

தேனி மாவட்டத்தில் உள்ள  கம்பம் பகுதியில் இரண்டு தனியார் பள்ளி வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றர். 
 
கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருக்கும் கிராமப்புறங்களில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் ஆனால் அந்த பள்ளிகளில் போதிய வாகன வசதி இல்லை என கூறப்படுகிறது. மேலும் சிறிய வாகனங்களில் அதிக மாணவர்களை ஏற்றிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். 
 
இந்நிலையில்,  இன்று காலை கூடலூரில் இருந்து கம்பம் நோக்கி வந்த இரண்டு தனியார் பள்ளி வாகனங்களின் ஓட்டுனர்கள்  ஒருவரையொருவர் போட்டி போட்டுக்கொண்டு முந்த முயற்சித்ததால் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகிய பேருந்து வளைவில் குப்புற கவிழ்ந்து விழுந்துள்ளன. இதனால் பேருந்தில் இருந்த பல மாணவர்கள் படுகாயம் அடைந்து ரத்த காயங்களுடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.