புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (13:10 IST)

திருமணமான 15 நாளில் புதுமனைவிக்கு புதுகுழந்தை: தெறித்து ஓடிய புதுமாப்பிள்ளை

கிருஷ்ணகிரியில் திருமணமான 15 நாளில் புது மனைவிக்கு குழந்தை பிறந்ததால், புதுமாப்பிள்ளை அலறி அடித்துக் கொண்டு ஓடி போயுள்ளார்.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் அஜிஸ். அஜிசுக்கும் பர்வீன் பானு என்ற பெண்ணுக்கும் கடந்த 15 நாளுக்கு முன்னர் கல்யாணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த நாளில் இருந்தே பர்வீன் சோகமாக காணப்பட்டார். கணவர் உட்பட யாரிடமும் மூஞ்சு கொடுத்து பேசாமல் இருந்துள்ளார். மேலும் தனக்கு வயிறு வலிக்கிறது என சொல்லி வந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று அவருக்கு வயிற்று வலி அதிகரிக்கவே, பதறிப்போன புதுமாப்பிள்ளை அஜிஸ், தன் புதுமனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
 
பர்வினை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், சிறிது நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்துவிடும் எனவும் தெரிவித்தனர். இதனால் பேரதிர்ச்சிக்கு ஆளான அஜிஸ் விட்டால் போதும் என அந்த இடத்தை விட்டு தப்பியோடிவிட்டார். தன்னை ஏமாற்றிவிட்டதாக அஜிஸ் காவல் நிலையத்தில் மணமகள் வீட்டார் மீது புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.