செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (11:17 IST)

வெறுக்குறதால எதும் நடக்காது.. மனிதநேயம் இருக்கணும்..! – வைரலாகும் சிறுவனின் வீடியோ!

மனிதநேயம் குறித்து பள்ளி சிறுவன் பேசும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் சிறுவர், சிறுமியர் செய்யும் சாகசங்கள், குறும்புகள் குறித்த வீடியோக்கள் அவ்வபோது வெளியாகி வைரலாவது வழக்கமாக உள்ளது. பல சமயங்களில் குழந்தைகள் அழும் வீடியோக்கள் கூட வைரலாகின. ஆனால் தற்போது மனிதநேயம் குறித்து பள்ளி சிறுவன் ஒருவன் பேசும் வீடியோ சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது.

அதில் பேசும் அந்த சிறுவன் “யாரையுமே வெறுக்குறேன்னு சொல்ல கூடாது. நாம ஒருத்தரை வெறுக்குறதால என்ன ஆக போகுது? என்ன கூட பல்லன்ன்னு சொல்லி கிண்டல் பண்ராங்க நிறைய பேர். ஆனா எல்லாரும் நம்ம ப்ரெண்ட்ஸ் மாதிரிதான. இதெல்லாம் ஏன் சொல்றேன்னா மனிதநேயம் இருக்கணும் எல்லாருக்கும். நம்ம நாடு ஒற்றுமையான நாடுதான. மனிதநேயம் இல்லாட்டி ஸ்பைடர் படத்துல வர வில்லன் மாதிரி ஆயிடுவோம்” என பேசியுள்ளான்.

சிறுவனின் இந்த பேச்சை பலரும் புகழ்ந்து பாராட்டி ஷேர் செய்து வரும் நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.