1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 மே 2022 (12:34 IST)

அடுத்த கல்வியாண்டிற்கு தயாரான புத்தகங்கள்! – விநியோகிக்கும் பணி தொடக்கம்!

Books
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டு முடிந்துள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டிற்கான பாட புத்தகங்கள் விநியோகம் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நேரடி பொதுத்தேர்வுகள் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு நேரடி பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் பொதுத்தேர்வுகள் முடிந்து அடுத்த கல்வியாண்டிற்காக பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அடுத்த கல்வியாண்டில் தேர்வுகள் நடைபெறும் தேதிகளும் அறிவிக்கப்பட்டன.

தற்போது ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளி பாட புத்தகங்களை விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. 2022-23 கல்வியாண்டில் அரசு மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்களுக்கு மொத்தமாக 5.19 கோடி பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3.35 கோடி புத்தகங்கள் மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டுள்ளன. மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்காக 1.83 கோடி பாடப் புத்தகங்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.