1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2023 (18:40 IST)

தமிழகத்தின் புதிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவா? சவுக்கு சங்கர் ட்விட்டால் பரபரப்பு..!

தமிழகத்தின் நிதி அமைச்சராக பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தற்போது இருந்து வரும் நிலையில் பிரபல ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தங்கம் தென்னரசு புதிய நிதி அமைச்சராக பொறுப்பேற்க இருப்பதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி திமுக எம்பி கனிமொழி சொத்து பட்டியலை வெளியிட்டார் என்பதும் அது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் பத்திரிகையாளர் ஒருவருடன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோவை அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டாலின், உதயநிதி குடும்பத்திற்கு 30 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 
 
இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வரும் நிலையில் திமுக தலைமை அவர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் எனவே அவரை பதவியில் இருந்து தூக்க திட்டமிட்டுள்ளதாகவும் வதந்திகள் பரவி வருகிறது. இந்த வதந்தியை உறுதி செய்யும் வகைகள் சவுக்கு சங்கத் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய நிதியமைச்சர் குறித்து  தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran