ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.5 கோடி: ஆளுனர் மாளிகை செலவு குறித்து அமைச்சர் பிடிஆர்..!
ஆளுநர் மாளிகையின் செலவு ஐம்பது லட்சமாக இருந்த நிலையில் அதிமுக ஆட்சியில் அது 5 கோடியாக மாறி உள்ளது என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் குறை கூறியுள்ளார்
2018 -19 ஆம் ஆண்டில் ஆளுநர் மாளிகைக்கு 50 லட்சம் ரூபாயில் இருந்து 5 கோடியாக செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட அந்த தொகையை ஆய்வு செய்தால் ரூபாய் ஐந்து கோடியில் நான்கு கோடியை அட்சயபாத்திரம் அமைப்பில் இருந்த பணத்தை கொடுத்துள்ளனர். மீதமுள்ள ஒரு கோடி ஆளுநர் மாளிகையில் கண்ணுக்கு தெரியாத கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஐந்து கோடி கொடுக்கப்பட்டது அதில் ரூபாய் ஒரு கோடி அட்சய பாத்திரத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. பின் அந்த திட்டமே நின்று போனது. இதுபோன்று பணத்தை மறைமுகமாக கணக்கு கொண்டு செல்வது ஜனநாயக மரபில் கிடையாது. இது நல்ல திட்டமே இல்லை என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்
Edited by Siva