திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2022 (22:06 IST)

சவூதி மன்னரை சந்தித்து பேசுவாரா அமெரிக்க அதிபர்? முக்கிய தகவல்

சவுதி அரேபிய மன்னரை சந்தித்துப் பேச வாய்ப்பில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷியா நாட்டில் உள்ள பாலி என்ற தீவில் அடுத்த மாதம் 15,16 ஆகிய தேதிகளில் ஜி20 நாடுகளின் தலைவர்கள்  மா நாடு நடைபெறவுள்ளது. இந்த மா நாட்டில் இந்தியா, அமெரிக்கா, இந்தோனேஷியா, இங்கிலாந்து, பிரேசில், சீனா, ரஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில்,  இந்த  மா நாட்டின் போது, சவூதி அரேபிய மன்னரை சந்தித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றுவார் என கூறப்பட்ட நிலையில், அமெரிக அதிபர் சவுதி மன்னை சந்திக்க திட்டமில்லை என சல்லிவன் என்ற அதிகாரி  தகவல் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா, ரஷியா உளிட்ட ஒபெக் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கச்சா உற்பதியை தினமும் 20 பேரல்கள் குறைத்துள்ள நிலையில், ஒரு பேரல்  75 டாலரில் இருந்து 90 பேரலாக அதிகரித்துள்ளது. விரைவில் 90 டாலர் அதிகரிக்கும் என தெரிகிறது. இது அமெரிக்க  டாலருக்கு நிகரான பல நாட்டு ரூபாய் மதிப்புகளில் வீழ்ச்சியை ஏற்படுத்திய நியலியில், அமெரிக்கா அதிபர் சவூதி அதிபரை சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 
Edited by Sinoj