இல்லத்திற்கு கொண்டு வரப்பட்ட தந்தை-மகள் உடல்கள்: சத்யா உறவினர்கள் கதறல்!
இல்லத்திற்கு கொண்டு வரப்பட்ட தந்தை-மகள் உடல்கள்: சத்யா உறவினர்கள் கதறல்!
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சத்யா மற்றும் அவரது மறைவால் அதிர்ச்சி அடைந்து தற்கொலை செய்து கொண்ட அவரது தந்தை மாணிக்கம் ஆகிய இருவரது உடல்களும் சத்யாவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
சத்யா மற்றும் மாணிக்கம் ஆகிய இருவரது உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து இருவரது உடல்களும் சத்யாவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
சத்யா, மாணிக்கம் ஆகியோர் உடலை பார்த்த சத்யாவின் உறவினர்கள் கதறி அழுத காட்சி கல் நெஞ்சையும் கறைக்கும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சத்யாவை கொலை செய்த சதீஷ்க்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என அந்த பகுதியில் உள்ளவர்கள் ஆவேசமாக பேசி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva