1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 25 டிசம்பர் 2017 (15:13 IST)

தினகரனுக்கு சிறையில் இருந்து சசிகலா வாழ்த்து

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனுக்கு சசிகலா சிறையில் இருந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் எதிர்பார்க்காத அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதைத்தொடர்ந்து இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் 6 பேர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கட்சியின் உயர்மட்ட குழு அறிவித்தது.
 
தேர்தல் அதிகாரியிடம் இருந்து டிடிவி தினகரன் வெற்றிப்பெற்ற சான்றிதழை பெற்று வீடு திரும்பிய தினகரன், சிறையில் இருக்கும் சசிகலாவை தொடர்பு கொண்டு வெற்றிப்பெற்றதை தெரிவித்துள்ளார். சசிகலா மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தன்னை இப்போது பார்க்க பெங்களூர் சிறைக்கு வரவேண்டாம் என்றும் சசிகலா கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.